Manju Warrier left from prithiviraj film kaapa

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் 'அசுரன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகே 61' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகும் 'காப்பா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை முதலில் வேணு இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்பு சில காரணங்களால் அவர் வெளியேறி தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d809be4a-62f2-4890-97cf-11bac47a77d0" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_3.jpg" />

Advertisment

இந்நிலையில் 'காப்பா' படத்திலிருந்து மஞ்சு வாரியர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் இயக்குநர் மாறியுள்ளதால் படப்பிடிப்பு தேதியில் குழப்பம் ஏற்பட்டு தற்போது மஞ்சு வாரியருக்கு கால்ஷீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மஞ்சு வாரியர் இதனை அதிகாரபூர்வமாக சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.